மாவட்ட செய்திகள்

தண்ணீர் குழாயில் உடைப்பு; கோபியில் குடிநீர் வினியோகம் பாதிப்பு + "||" + water pipe broken

தண்ணீர் குழாயில் உடைப்பு; கோபியில் குடிநீர் வினியோகம் பாதிப்பு

தண்ணீர் குழாயில் உடைப்பு; கோபியில் குடிநீர் வினியோகம் பாதிப்பு
தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கோபியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
கடத்தூர்
கோபி அருகே செல்லும் நஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் பவானி ஆறு செல்கிறது. இங்கு தலைமை குடிநீர் நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் குடிநீர் கோபியில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
கடந்த சில நாட்களுக்கு முன்பு கரட்டடிபாளையத்தில் இருந்து தலைமை குடிநீர் நிலையம் செல்லும் ரோட்டில் நிலத்தடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் அந்த பணிகள் முடிவடையாத காரணத்தால் கடந்த 1 வாரமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோபி பகுதியில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.