மாவட்ட செய்திகள்

பெருந்துறை அருகே மனைவி, மகளை பிரிந்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை + "||" + suicide

பெருந்துறை அருகே மனைவி, மகளை பிரிந்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

பெருந்துறை அருகே மனைவி, மகளை பிரிந்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
பெருந்துறை அருகே மனைவி, மகளை பிரிந்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை
பெருந்துறை அருகே மனைவி, மகளை பிரிந்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 38). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த பாரதி (25) என்பவரும் வேலை பார்த்தார்.
இதனால் தர்மராஜுக்கும், பாரதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அன்புச்செல்வி (4) என்கிற மகள் உள்ளாள். தர்மராஜ் குடும்பத்துடன் ஈரோடு பகுதியில் வசித்து வந்துள்ளார். தற்போது பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார்் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
மனைவி, மகள் பிரிவு
இந்த நிலையில், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாரதி கணவரை பிரிந்து தனது மகளுடன் புதுக்கோட்டையில் உள்ள தாய் வீட்டு்க்கு சென்றுவிட்டார். மனைவி, மகள் பிரிவால் தர்மராஜ் மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளானதாக தெரிகிறது. மேலும் மனம் உடைந்து காணப்பட்டு வந்தார். 
இந்தநிைலயில் நேற்று முன்தினம் மாலை பெருந்துறை அருகே உள்ள கூரப்பாளையத்துக்கு சென்ற அவர் ரோட்டோரம் உட்கார்ந்து விஷம் குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தர்மராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
திருக்கோவிலூர் அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. மதுராந்தகம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
மதுராந்தகம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
3. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. லாலாபேட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை
லாலாபேட்டை அருகே குடும்ப தகராறால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. சட்டசபை தேர்தல் நடந்த மறுநாளில் கள்ளக்குறிச்சி கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை
சட்டசபை தேர்தல் முடிந்த மறுநாளில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.