மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டார் + "||" + counting center

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் மையம் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகள் மூடி முத்திரையிடப்பட்டன. தொடர்ந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. அதுமட்டுமின்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
நேற்று சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த கலெக்டர் சி.கதிரவன், அங்கு பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் உள்ள கேமராக்கள் சரியாக வேலை செய்கின்றனவா, முழுமையாக காட்சிகள் பதிவாகின்றனவா என்பது குறித்து கலெக்டர் பார்வையிட்டார். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தொழில் நுட்ப பணியாளர்களிடம் கலெக்டர் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடம் பேசிய அவர் எந்த சூழலிலும் யாரையும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன.
2. கள்ளக்குறிச்சியில் 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் கலெக்டர் கிரண்குராலா நேரில் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் கலெக்டர் கிரண்குராலா நேரில் ஆய்வு
3. தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையம்
வாக்கு எண்ணிக்கை மையம்