கரட்டூர் தேன் மாரியம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு


கரட்டூர் தேன் மாரியம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 9 April 2021 4:20 AM IST (Updated: 9 April 2021 4:20 AM IST)
t-max-icont-min-icon

கரட்டூர் தேன் மாரியம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

ஆட்டையாம்பட்டி:
சேலம் அருகே கரட்டூர் தேன் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று காலை முதல் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பலர் கோழி, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் பூங்கரகம், அக்னி கரகம், அலகு குத்துதல் மற்றும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று (வெள்ளிக்கிழமை) அம்மன் ஊர்வலமும், நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story