பரமன்குறிச்சி அருகே இந்து முன்னணி கூட்டம்


பரமன்குறிச்சி அருகே இந்து முன்னணி கூட்டம்
x
தினத்தந்தி 9 April 2021 5:57 PM IST (Updated: 9 April 2021 5:57 PM IST)
t-max-icont-min-icon

பரமன்குறிச்சி அருகே இந்து முன்னணி கூட்டம் நடைபெற்றது.

உடன்குடி:
பரமன்குறிச்சி அருகே ராமநாதபுரம், கந்தசாமிபுரம், அய்யனார் நகர் ஆகிய 3 ஊர்களில் இந்து முன்னணி கிராமக்குழு கூட்டம் நடந்தது..
இந்து அன்னையர் முன்னணி மாவட்டப்பொறுப்பாளர் கேசவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்,  இந்து ஒற்றுமை, ராமாயணம், மகாபாரதம், கந்த சஷ்டி கவசம் கூறும் நல் ஒழுக்கங்கள் குறித்து அவர் பேசினார். இதில் இந்து முன்னணி, இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் பெரியமுத்து ராஜாத்தி, ஜெயப்பட்டு, கண்ணகி, அழகுலட்சுமி, சித்ரா, முத்துலட்சுமி, சந்திரா, லிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story