பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பழனி:
பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிவன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதன்படி .பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியாவுடையார் கோவிலில் நேற்று மாலை பெரியாவுடையாருக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
முன்னதாக நந்தி பெருமானுக்கும் 16 வகை அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் தீபாரதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல் பழனி நகரில் உள்ள பட்டத்து விநாயகர் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி கோவில், வேளீஸ்வரர் கோவில், அடிவாரம் மீனாட்சியம்மன் கோவில், மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதே போன்று நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவர் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
Related Tags :
Next Story