தேனி அருகே கார் மீது லாரி மோதல்; 4 பேர் படுகாயம்


தேனி அருகே கார் மீது லாரி மோதல்; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 April 2021 9:46 PM IST (Updated: 9 April 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கேரளாவை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

உப்புக்கோட்டை:
கேரளாவை சேர்ந்தவர் ரியாஸ் (வயது 38). இவர் நேற்று, தனது உறவினர்களான ஜெய்நிதின் (50), பாத்திமா (60), சாமினா (30) ஆகியோருடன் கேரளாவில் இருந்து தேனிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். 
தேனி அருகே புதிய பைபாஸ் சாலை பகுதியில் அவர்கள் வந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி ரியாஸ் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். 
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக விபத்தில் சிக்கிய ரியாஸ், ஜெய்நிதின், பாத்திமா, சாமினா ஆகிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கள்ளிப்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த முருகன் (36) என்பவர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story