தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசு தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விதிமுறைகளை வகுத்து உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா விதிமுறையை பின்பற்றாக கடைக்காரர்களுக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது. முககவசம் அணியாத பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அனுமதி இல்லை
மேலும் பூங்காக்கள், கடற்கரை பீச் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. முதியவர்கள், குழந்தைகள் பூங்காக்களில் அனுமதிக்கப்படவில்லை. அதே போன்று பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், கூட்டமாக நடைபயிற்சி மேற்கொள்ளக்கூடாது, விளையாட்டு சாதனங்கள், கழிப்பறையை பயன்படுத்த அனுமதி கிடையாது. கைகளை சோப்பினால் நன்கு கழுவிய பிறகு உள்ளே வர வேண்டும், தேவையில்லாமல் கூட்டம் கூடவோ, உட்கார்ந்து பேசவோ கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிப்புகள் அனைத்து பூங்காக்களிலும் வைக்கப்பட்டு உள்ளன.
இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் மக்களை வாட்டத் தொடங்கி உள்ளது.
Related Tags :
Next Story