தேனி மாவட்டத்தில் ஏறுமுகத்தில் கொரோனா பாதிப்பு
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாகவே உள்ளது. நேற்று ஒரேநாளில் 37 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
ஆண்டிப்பட்டி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரசின் பாதிப்பு, கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இது கொரோனா பாதிப்பின் 2-வது அலையாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் தொற்று பாதிப்பு 10-க்குள் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 20-க்கு மேலாக உள்ளது. தொடர்ந்து தொற்று பாதிப்பு மாவட்டத்தில் ஏறுமுகமாகவே இருக்கிறது. இதற்கிடையே நேற்று ஒரேநாளில் 37 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story