நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியிடம் நகை பறிப்பு


நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 9 April 2021 9:56 PM IST (Updated: 9 April 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியிடம் 4½ பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் காந்திஜி தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி சரசுவதி (வயது 75). இவர் நேற்று முன்தினம் தாமரைக்குளத்தில் இருந்து வடுகபட்டிக்கு செல்லும் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், திடீரென்று சரசுவதியின் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் சரசுவதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துவிட்டு தப்பியோடிய வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story