ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு பிரசாரம்


ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 9 April 2021 10:00 PM IST (Updated: 9 April 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் கொரோனா பரவலை தடுக்க ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

ராமேசுவரம், 
ராமேசுவரத்தில் கொரோனா பரவலை தடுக்க ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. 
கட்டுப்பாடுகள்
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் அதிகமாகி வருகிறது.கொரோனா  பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படி ராமேசுவரம் பகுதியில் நேற்று நகராட்சி ஆணையாளர் ராமர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் ஆட்டோ மூலம் ஒலிபெருக்கி வைத்து ராமேசுவரம் நகர் முழுவதும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்யும்போதும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், காய்கறி கடை, பலசரக்கு கடை உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்க வேண்டும், முக கவசம் அணியாமல் வீட்டை விட்டு வரும் மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று  ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
எச்சரிக்கை
ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் எனவும் முக கவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி மூலம் ஒலிபெருக்கியில் எச்சரிக்கை செய்யப்பட்டது.

Next Story