பாடந்தொரை, புதுமந்து உள்பட 7 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு


பாடந்தொரை, புதுமந்து உள்பட 7 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
x
தினத்தந்தி 9 April 2021 10:16 PM IST (Updated: 9 April 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

பாடந்தொரை, புதுமந்து உள்பட 7 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டு பேனர் கட்டப்பட்டு உள்ளது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஒரே இடத்தில் 3 பேருக்கு மேல் கொரோனா பாதித்து இருந்தால், அப்பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

 அதன்படி நீலகிரியில் ஊட்டி புதுமந்து, சர்ச்ஹில், எட்டின்ஸ்ரோடு, கெட்டிகம்பை, கேர்கொம்பை, கோடேரி, பாடந்தொரை ஆகிய 7 இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டு பேனர் கட்டப்பட்டு உள்ளது. 

அனுமதி இல்லாமல் வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லக்கூடாது. உள்ளே வசிப்பவர்கள் வெளியே வரக்கூடாது. நகராட்சி, உள்ளாட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்தும், பிளீச்சிங் பவுடர் போட்டும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story