கொரோனா தடுப்பூசி போடும் பணி
கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
பனைக்குளம்,
மண்டபம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கிறது. குறிப்பாக உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஆஸ்பத்திரி ஆக செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத் திரியை 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் காயம் அடை பவர்களுக்கு இங்கு முதலுதவி செய்தபின் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கிராமங்கள்தோறும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மினி கிளினிக் உள் ளிட்ட இடங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது பொது மக்களில் 45 வயதிற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசிபோடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
Related Tags :
Next Story