கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
பொள்ளாச்சி அருகே காதலன் இறந்த துக்கம் தாங்காமல் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே காதலன் இறந்த துக்கம் தாங்காமல் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவி
பொள்ளாச்சி அருகே உள்ள காபுலிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகள் பர்தினி (வயது 19). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் உடுமலையை சேர்ந்த ரமேஷ் என்பவரை அவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, கடந்த 6-ந் தேதி நடந்த சாலை விபத்தில் ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.
விஷம் குடித்து தற்கொலை
இதை கேள்விப்பட்டதால் பர்தினி மிகவும் மன வேதனையில் இருந்ததுடன் வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தினை (விஷம்) எடுத்து குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பர்தினி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story