தாராபுரம் அருகே சின்னக்காம்பாளையத்தில் செத்த கோழிகளை திறந்து வெளியில் வீசாமல் பாதுகாப்பாக எரிப்போம் என்று பண்ணை உரிமையாளர்கள் பொதுமக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உறுதி அளித்தனர்.
தாராபுரம் அருகே சின்னக்காம்பாளையத்தில் செத்த கோழிகளை திறந்து வெளியில் வீசாமல் பாதுகாப்பாக எரிப்போம் என்று பண்ணை உரிமையாளர்கள் பொதுமக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உறுதி அளித்தனர்.
குண்டடம்
தாராபுரம் அருகே சின்னக்காம்பாளையத்தில் செத்த கோழிகளை திறந்து வெளியில் வீசாமல் பாதுகாப்பாக எரிப்போம் என்று பண்ணை உரிமையாளர்கள் பொதுமக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உறுதி அளித்தனர்.
செத்த கோழிகள் வீச்சு
தாராபுரத்தை அடுத்த சின்னக்கம்பாளையத்தில் செத்த கோழிகளை சாலையில் வீசும் பண்ணை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். கறிக்கோழி மற்றும் முட்டை உற்பத்தி பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. பண்ணையில் செத்துப்போகும் கோழிகளை அருகிலுள்ள பொது இடங்களில் வீசி செல்கின்றனர்.
இதனால் தெரு நாய்கள் செத்த கோழிகளை தின்று வெறிபிடித்து சுற்றித் திரிகின்றன. இதனால் வெறிநாய்கள் அருகில் உள்ள விவசாய பண்ணைகளில் புகுந்து வளர்ப்பு ஆடுகளை கடித்தும் வந்ததது. மேலும் செத்த கோழிகளினால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால் கோழிப்பண்ணை முன்பு ஒன்று திரண்டு கோழிக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சப்-கலெக்டரிடம் மனு
இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அதே பகுதியில் கோழி பண்ணையிலிருந்து செத்த கோழிகளை சுகாதாரமற்ற முறையில் அருகில் உள்ள குழிகளில் வீசிச் சென்றுள்ளனர்.
இதை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து, சின்னக்கம்பாளையம் சந்திராபுரம் உள்ளிட்ட 8 ஊரைச் சேர்ந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று சப்-கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்தனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ஆனால் சப்-கலெக்டர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருப்பதால் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை. இதனால் அலுவலக நுழைவாயிலில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாசில்தார் ரவிச்சந்திரன் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து விவசாயிகள் மற்றும் கிராம பொது மக்களிடத்தில் மனுக்களை பெற்றுக்கொண்டு கோழிப்பண்ணை கழிவுகள் குறித்த பிரச்சினையை காலை 11 மணிக்கு தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்
இதனை தொடர்ந்து நேற்று தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தாசில்தார் ரவிசந்திரன் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் செத்த கோழிகளை புதைக்காமல் பாதுகாப்பாக எரித்து விடுவதாகவும், மேலும் கோழி இறகுகள் பறக்காதவாறு வேலி தடுப்பு பாய்கள் அமைத்தும் சுகாதார முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாாமல் அகற்றுவோம், மேலும் வெறிநாய்கள் கடித்து செத்த 5 ஆடுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என பண்ணையாளர்கள் உறுதி அளித்தனர். அப்போது வருவாய் ஆய்வாளர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story