வால்பாறை தாவரவியல் பூங்காவில் விளையாட்டு உபரகணங்கள் பொருத்தும் பணி


வால்பாறை தாவரவியல் பூங்காவில் விளையாட்டு உபரகணங்கள் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 9 April 2021 10:55 PM IST (Updated: 9 April 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை தாவரவியல் பூங்காவில் விளையாட்டு உபரகணங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதுபோன்று இங்கு நடவு செய்யப்பட்ட செடிகளும் வளர தொடங்கி உள்ளது.

வால்பாறை

வால்பாறை தாவரவியல் பூங்காவில் விளையாட்டு உபரகணங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

அதுபோன்று இங்கு நடவு செய்யப்பட்ட செடிகளும் வளர தொடங்கி உள்ளது. 

வால்பாறை தாவரவியல் பூங்கா 

மலைப்பிரதேசமான வால்பாறையில் ஏராளமான சுற்றுலா மையங்கள் உள்ளன. இதனால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம். 

மேலும் சுற்றுலா பயணிகளை கவர தாவரவியல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி வால்பாறையின் நுழைவு வாயில் பகுதியில் பி.ஏ.பி. காலனியில் 4.25 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

இங்கு பூச்செடிகள், பல ஆண்டுகள் வாழக்கூடிய மரங்கள், பல வண்ணங்களில் பூக்கக்கூடிய மலர் செடிகள், நிழல் தரும் மரங்கள் என ஆயிரக்கணக்கான செடிகள் நடப்பட்டு உள்ளன. அவை தற்போது வளர தொடங்கி உள்ளது. 

விளையாட்டு உபகரணங்கள் 

மேலும் தாவரவியல் பூங்காவின் மையப்பகுதியில் பல வண்ணங்களை கொண்ட தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கும் பணியும் முடிவடையும் நிலைக்கு வந்து விட்டது. 

தற்போது விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளை அதிகளவில் கவரும் வகையில் தூரி, சறுக்கல், உடலை வளைத்து நுழைந்து செல்லும் விளையாட்டுகள் சிறிய வகை ராட்டினங்கள் உள்பட பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.  

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

விரைவில் முடிந்து விடும் 

நகராட்சி சார்பில் படகு இல்லம், பூங்கா கடந்த பிப்ரவரி மாதத்தில் திறக்கப்பட்டது. ஆனால் ஒருசில பணிகள் மட்டும் இன்னும் முடியாமல் உள்ளது. அந்த பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 

அடுத்த மாத இறுதியில் கோடைவிழா நடைபெறும். அந்த விழாவுக்கு முன்பாகவே அனைத்து பணிகளும் விரைவில் முடிவடைந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்ல பூங்கா தயாராகிவிடும். 

தற்போது நடைபாதையில் கற்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story