முதியோர் 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி


முதியோர் 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 9 April 2021 11:09 PM IST (Updated: 9 April 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

முதியோர் 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி

அனுப்பர்பாளையம் 
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுகம் ரெசிடென்சியில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் உள்பட 50 முதியோருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. சேவூர் ஆரம்ப சுகாதார மையத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் தடுப்பூசியை போட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பக்தவத்சலம், செயலாளர் மோகனன், பொருளாளர் ஹரிகரன், இணை செயலாளர் மனோகரன், தேவி செந்தில் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


Next Story