அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் ஜெர்மென் தொழில்நுட்பத்தில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் ஜெர்மென் தொழில்நுட்பத்தில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக  பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
x
தினத்தந்தி 9 April 2021 11:16 PM IST (Updated: 9 April 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் ஜெர்மென் தொழில்நுட்பத்தில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவினாசி
 அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் ஜெர்மென் தொழில்நுட்பத்தில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக  பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரூ.1,652 கோடி
திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு அவினாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 1600 பணியாளர்கள் வேலைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
பவானி, திருவாச்சி, நல்லி கவுண்டம்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர், ஆகிய இடங்களில் நீரேற்றுநிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் 2 மாத காலத்திற்குள் நீரேற்று நிலையப்பணிகள் முடிவடைந்துவிடும். 
83 சதவீதம் பணிகள் நிறைவு
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இத்திட்டத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களிலுள்ள அனைத்து குளங்களுக்கும் நீர் சென்றடைய கிளை குழாய்கள் அமைக்கும் பணி, மற்றும் மெயின்லைன் பைப் இணைப்பு பணிகளும் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. 
இத்திட்டத்தில் வெர்டிகல் டர்பன் பம்ப் எனப்படும் 1600 எச்.பி. திறன் கொண்ட உயர்தர குழாய் பயன்படுத்தப்படுகிறது. நுணுக்கமான தொழில்நுட்ப பணியாக இருப்பதால் ஜெர்மன் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் மேற்பார்வையில் அனைத்து பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. 
இதுவரை 83 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. வருகிற செப்டம்பர் மாதத்தில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து அடுத்தகட்டமாக திட்டம் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story