கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்
கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
கரூர்
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த தர்பூசணி பழங்கள் கரூரில் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
அமோக விற்பனை
கரூரில் லைட்ஹவுஸ் கார்னர், சுங்ககேட், திருமாநிலையூர், ஜவகர்பஜார், தாந்தோணிமலை உள்பட பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அமராவதி பாலம் உள்ளிட்ட நகரின் பல இடங்களில் சரக்கு வேன்கள் மூலமாகவும் தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. காஞ்சிபுரம், திண்டிவனம் போன்ற ஊர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த தர்பூசணி பழங்களின் விலை 1 கிலோ ரூ.15, ரூ.20, ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
தர்பூசணி பழம் கீற்று ஒன்று ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயிலின் தாகத்தை தணிக்க குறைந்த விலையில் கிடைக்கும் தர்பூசணி பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
Related Tags :
Next Story