மோட்டார் சைக்கிளை எரித்தவர் கைது


மோட்டார் சைக்கிளை எரித்தவர் கைது
x
தினத்தந்தி 9 April 2021 11:40 PM IST (Updated: 9 April 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளை எரித்தவர் கைது செய்யப்பட்டார்.

க.பரமத்தி
க.பரமத்தி அருகே பள்ளபாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சித்தார்த்தன். இவரது மகன் அய்யப்பன் (வயது 23). இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இவருடைய நண்பர் ஜெயபால் தண்ணீர் பந்தலில் மீன்கடை வைத்திருக்கிறார். இதற்கு எதிரே விஸ்வநாதபுரி, அண்ணாநகர், தெற்கு தெருவை சேர்ந்த வேல் என்கிற வேல்முருகன் (40) என்பரும் மீன்கடை வைத்துள்ளார். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி இரவு அய்யப்பன் தனது மோட்டார் சைக்கிளை தனது நண்பர் ஜெயபால் கடைக்கு முன்பு நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றார். அப்போது அங்கு வந்த வேல்முருகன், அய்யப்பன் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துள்ளார். இதுகுறித்து க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story