நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்ந்தது


நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்ந்தது
x
தினத்தந்தி 9 April 2021 6:17 PM GMT (Updated: 9 April 2021 7:17 PM GMT)

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்ந்தது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டைக்கோழி விலை கிலோ ரூ.75-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

மேலும் நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.122-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.1 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.123-ஆக உயர்ந்தது. முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக இருந்து வருகிறது.

Next Story