தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு செய்தார்
தர்மபுரி,
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ராமராஜ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குழந்தை பாதுகாப்பு இல்லங்களை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு மேற்கொள்ளப்படும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார். அங்குள்ள தங்குமிடம், சமையலறை, குளிக்குமிடம் போன்றவை சிறுவர் நீதி சட்டத்தில் கூறியுள்ளபடி அமைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார்.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார். அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவால் 2020 -2021-ம் ஆண்டுகளில் கையாளப்பட்ட குழந்தைகள் குறித்த விவரங்களை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சரவணன் மற்றும் 4 உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார்.தர்மபுரியில் இருந்து 20 கி.மீ.தொலைவில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலக் குழு அலுவலகத்தை பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் தர்மபுரி நகர எல்லை பகுதியில் மாற்றுவது அவசியம் என்று அப்போது தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் 2020-2021- ம் ஆண்டுகளில் கையாளப்பட்ட குழந்தை பாதுகாப்பு தொடர்புடைய புகார்கள் குறித்தும் அவை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, பாதுகாப்பு அலுவலர்கள் சித்தார்த்தன், சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இளையோர் நீதி குழும உறுப்பினர்கள் ரவி, உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story