பரமத்தி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
பரமத்தி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 48). தொழிலாளி. இவருைடய மனைவி புஷ்பவள்ளி (43). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்்தநிைலயில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த ராதாகிருஷ்ணன் விஷம் குடித்து விட்டு உயிருக்கு போராடினார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ராதாகிருஷ்ணனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story