புனித தோமையார் ஆலய தேரோட்டம்
புனித தோமையார் ஆலய தேரோட்டம் நடந்தது.
மணப்பாறை
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள புனித தோமையார் ஆலய பாஸ்கா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருப்பலிகள் நடைபெற்ற நிலையில் நேற்று மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்கள் மற்றும் பெரிய தேர்பவனி நடைபெற்றது. ஆலயம் முன்பு பங்குத்தந்தை தேரை மந்திரித்து புனித நீர் தெளித்ததை தொடர்ந்து ஏராளமானவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிலையில் இருந்து புறப்பட்ட தேர் ஊரைச்சுற்றி மீண்டும் நிலையை வந்து அடைந்தது. முன்னதாக 6 சப்பரங்கள் தேருக்கு முன் சென்றன. இன்று நடைபெறுவதாக இருந்து தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. திருவிழாவில் பங்குத்தந்தைகள், ஊர்முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story