படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு


படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு
x
தினத்தந்தி 10 April 2021 12:33 AM IST (Updated: 10 April 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.

கூடங்குளம், ஏப்:
கூடங்குளம் அருகே இடிந்தகரை பீட்டர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜா (வயது 56). மீனவரான இவர் நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த சக மீனவர்கள் 5 பேருடன் இசிதோர் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் கடலில் மீன்பிடிக்க சென்றார். கடற்கரையில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடலில் சென்றபோது, ராட்சத அலை எழுந்தது. அப்போது படகில் இருந்த ஸ்டீபன் ராஜா நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்தார். உடனே சக மீனவர்கள் கடலில் குதித்து ஸ்டீபன் ராஜாவை காப்பாற்றி சிகிச்சைக்காக கூடங்குளம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்டீபன் ராஜா இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து சென்று, இறந்த ஸ்டீபன் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டீபன் ராஜா குடும்பத்தினரை இன்பதுரை எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். அரசிடம் இருந்து நிவாரண உதவியையும் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா உடன் இருந்தார்.

Next Story