காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு


காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு
x
தினத்தந்தி 10 April 2021 12:37 AM IST (Updated: 10 April 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

விக்கிரமசிங்கபுரம், ஏப்:
பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, காைரயாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பேச்சியம்மன், பிரம்மராட்சி, சுடலை மாடசுவாமி, தளவாய் மாடசுவாமி, தூசிமாடசாமி, பட்டவராயன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவிலில் பேச்சியம்மன், பிரம்மராட்சி சன்னதி முன்பாக ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பாபநாசம் பணிமனையில் இருந்து காரையாறுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story