பாளையங்கோட்டை டயோசீசன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்
பாளையங்கோட்டை டயோசீசன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது.
நெல்லை, ஏப்:
நெல்லை சி.எஸ்.ஐ. டயோசீசன் நிர்வாகத்திற்கான தேர்தல் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. நெல்லை அருகே உள்ள அழகிய பாண்டியபுரம் சேகரத்துக்கான தேர்தல் 2️ முறை நடத்தப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பை சேர்ந்த இன்பராஜ், ராசையா ஆகியோர் தலைமையில் ஆதரவாளர்கள், பாளையங்கோட்டையில் உள்ள டயோசீசன் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோர்ட்டு மூலம் தீர்வு காணுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story