விவசாயி தற்கொலை
களக்காடு அருகே விவசாயி விஷம் குடித்து இறந்தார்.
களக்காடு, ஏப்:
களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் வேலவன்குடியிருப்பைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 30). விவசாயி. இவருடைய மனைவி நம்பிதாய். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் பொன்ராஜ் மனமுடைந்த நிலையில் இருந்தார். இவர் சம்பவத்தன்று அங்குள்ள வயலுக்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story