வாசுதேவநல்லூரில் வைக்கோல் லாரி எரிந்து நாசம்
வாசுதேவநல்லூரில் வைக்கோல் லாரி எரிந்து நாசமானது.
வாசுதேவநல்லூர், ஏப்:
வாசுதேவநல்லூரில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அம்பேத்கர் சிலை அருகில் வைக்கோல் லாரி ஒன்று நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த நவாஸ் என்பவருக்கு சொந்தமானது ஆகும். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வைக்கோல் லாரியில் தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் வெட்டும்பெருமாள் தலைமையில், நிலைய அலுவலர்கள் சேக்அப்துல்லா (வாசுதேவநல்லூர்), குணசேகரன் (கடையநல்லூர்) மற்றும் வீரர்கள் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோலுடன் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வைக்கோல் லாரிக்கு யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story