மஞ்சுவிரட்டு விழா
சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு விழா நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே மூவன்பட்டியில் உள்ள முத்தான் கருப்பர்சாமி கோவில் சார்பில் பங்குனி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மூவன்பட்டி பொதுதொழுவில் இருந்து கிராமத்தார் சார்பில் ஜவுளி எடுத்து வரப்பட்டது. முத்தான் வயலில் இருந்த கோவில் மாடுகளுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தொழுவில் இருந்து ஒன்றன் ஒன்றாக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகள் அப்பகுதியை சேர்ந்த காளையர்கள் அடக்கினார்கள். மஞ்சுவிரட்டு விழாவில் பிடிபடாமல் சென்ற காளைகளுக்கும் காளைகளை பிடித்த காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story