துர்க்கை அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்


துர்க்கை அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 9 April 2021 8:04 PM GMT (Updated: 9 April 2021 8:04 PM GMT)

துர்க்கை அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நேற்று காலை நாச்சியார்குளத்தில் இருந்து பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கடைவீதி, குருக்கள் தெரு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மதியம் கோவிலை வந்தடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு துர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நாதஸ்வர கச்சேரியும் நடைபெற்றது.

Next Story