தீக்குளிக்க முயன்ற தம்பதி கைது


தீக்குளிக்க முயன்ற தம்பதி கைது
x

தீக்குளிக்க முயன்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்

மதுரை
மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (வயது 35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்தது. எனவே ஜோசப் அவர் மீது அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் ஜோசப், அவரது மனைவி திலகவதியுடன் மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு இருவரும் உடலில் மண்எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறத்தினார்கள். பின்னர் அவர்களை தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்து தம்பதியை கைது செய்தனர்.

Next Story