ஒரே நாளில் 5,059 பேருக்கு கொரோனா தடுப்பூசி ெசலுத்தப்பட்டது
ஒரே நாளில் 5,059 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது போல், தகுதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் நடக்கிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 5,059 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடுவது போல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் தனித்தனி வார்டுகள் அமைக்கும் பணி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரையில் ஆஸ்பத்திரிகள், கண்காணிப்பு மையங்கள் ஆகியவற்றில் மொத்தமாக 3,767 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் மேலும், கூடுதல் படுக்கைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல், கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 3767 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story