வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பு, குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்


வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பு, குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 April 2021 1:38 AM IST (Updated: 10 April 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பு, குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்-மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கழிவுகள் கலப்பு
மதுரை செல்லூர் உள்ளிட்ட கண்மாய்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் பந்தல்குடி கால்வாய் வழியாக வைகை ஆற்றுக்கு செல்கிறது.  ஆனால் தற்போது இந்த கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தொடர்பாகவும் மற்றும் வைகை ஆற்றில் கழிவுகள் கலப்பது குறித்து மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரித்தது. விசாரணையின் போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், பந்தல்குடி கால்வாய் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் சோதனை அடிப்படையில் இயங்கி வருகிறது. இன்னும் 15 நாட்களில் இந்த நிலையம் முழுமையாக இயங்கும் என தெரிவித்தார்.
உறுதிப்படுத்த வேண்டும்
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பந்தல்குடி கால்வாயில் குப்பைகள் சேருவதையும், கழிவு நீர் கலப்பதையும் தடுத்திடும் வகையில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். 
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க தொண்டு நிறுவனத்தினருடன் இணைந்து பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வை மாநகராட்சியினர் ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Next Story