தேவாலயத்தில் திருடிய 2 பேர் கைது
கொடைக்கானலில் உள்ள தேவாலயத்தில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக கடைகளில் பூட்டை உடைத்து பொருட்கள், பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
மேலும் தேவாலயங்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் அருகே உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தை பங்கு தந்தை டேவிட் பொன்பாண்டியன் திறக்க வந்தார்.
அப்போது தேவாலய கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் 2 பேர் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிக் கொண்டிருந்தனர்.
பங்கு தந்தையை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். திருடன், திருடன் என்று பங்கு தந்தை கூச்சலிட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை விரட்டி பிடித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பிரேம்சந்த் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள், வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கறசமங்கலம் பகுதியை சேர்ந்த பக்ருதீன் (வயது 51), ஜெய்லானி (31) என்றும், கொடைக்கானல் பகுதியில் தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story