சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு


சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு
x
தினத்தந்தி 10 April 2021 2:00 AM IST (Updated: 10 April 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்தார்.

விராலிமலை
விராலிமலை தாலுகா தேன்கனியூர் செவல்பட்டியைச் சேர்ந்தவர் சுகுமாறன்(வயது 49). இவர் கடந்த 3-ந் தேதி சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் செவல்பட்டியிலிருந்து கொடும்பாளூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். குட்டியபட்டி பாலம் அருகே சென்றபோது  சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சுகுமாறன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story