கன்னியாகுமரி கடலில் பகுதியில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம்


கன்னியாகுமரி கடலில் பகுதியில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம்
x
தினத்தந்தி 10 April 2021 2:15 AM IST (Updated: 10 April 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி கடல் பகுதியில் 61 நாட்கள் அமலில் உள்ள மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.

கன்னியாகுமரி, 
கன்னியாகுமரி கடல் பகுதியில் 61 நாட்கள் அமலில் உள்ள மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.
மீன்பிடி தடைகாலம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதோடு, மீன் இனம் அடியோடு அழிந்து விடும்.
எனவே மீன் இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக கருதப்படுகிறது.
61 நாட்கள் அமலில் இருக்கும்
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி கடல் பகுதி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான கடற்கரை பகுதியில்  விசைப்படகுகள் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையானது வருகிற 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதனால் கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோர பகுதியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

Next Story