சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 126 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 126 பேர் பாதிக்கப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 126 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 103 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 126 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 76 பேர், பனமரத்துப்பட்டி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், ஆத்தூரில் 5 பேர், மேட்டூரில் 4 பேர், நங்கவள்ளி, ஓமலூர், தாரமங்கலம், கொளத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், காடையாம்பட்டி, மேச்சேரி, சங்ககிரி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை
கடலூரில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்துவிட்டதால் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். 562 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story