வ.உ.சி. பூங்கா சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அடையாளம்
வ.உ.சி. பூங்கா சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அடையாளம் இடும் பணி நடைபெற்றது.
ஈரோடு
தமிழ்நாட்டில் இன்று (சனிக்கிழமை) முதல் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் அறிவிப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் போதிய சமூக இடைவெளியில் மக்கள் காத்து நின்று சந்தைக்குள் செல்லும் வகையில் நேற்று மாநகராட்சி பணியாளர்கள் சந்தையில் அடையாளமிட்டனர்.
இன்று (சனிக்கிழமை) முதல் வீட்டை விட்டு வெளியே வரும் அனைத்து பொதுமக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மீறுபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
Related Tags :
Next Story