புஞ்சைபுளியம்பட்டி அருேக வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து நாசம்


புஞ்சைபுளியம்பட்டி அருேக வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து நாசம்
x
தினத்தந்தி 10 April 2021 4:15 AM IST (Updated: 10 April 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி அருேக வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது.

புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். மேலும் வைக்கோல் போர் மீது தார்ப்பாய் போர்த்தி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதை பார்த்த சுப்பிரமணி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. எனினும் தீ விபத்தில் வைக்கோல் போர் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

Next Story