கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூர் பேரூராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூர் பேரூராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொடுமுடி
கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியை ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதைத்தொடர்ந்து கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொடுமுடியில் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் தலைமையில் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் பகுதி, கடைவீதி, புதிய பஸ் நிலையம், அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். இருக்கும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சென்னசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் வசந்தா தலைமையில் சந்தைப்பேட்டை, கோர்ட்டு வளாகம், பஸ் நிறுத்தம் மற்றும் வங்கிகள் ஆகிய இடங்களிலும், வெங்கம்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளித்தனர்.
Related Tags :
Next Story