திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 10 April 2021 4:17 AM IST (Updated: 10 April 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த  மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. 
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து கோபிக்கு இரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையின் 27-வது கொண்டை ஊசி வளைவில் இந்த லாரி வந்தபோது அங்குள்ள வளைவில் திரும்ப முடியாமல் நின்றது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த வழியாக வந்த மற்றொரு லாரியின் டிரைவர், முயற்சி செய்து அந்த லாரியை அங்கிருந்து திருப்பி நகர்த்தினார். இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story