கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடத்தூர்
கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் பராமரிப்பு பணி காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பணிகள் முடிந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் அணையில் குளிக்க பொதுப்பணித்துறை அனுமதி அளித்திருந்தது.
இதைத்தொடர்ந்து கொடிவேரி அணைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வர தொடங்கியிருந்தனர். இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு காலவரையின்றி கொடிவேரி அணை மூடப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story