தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு தாய் வெளியேறியதால் கல்லூரி மாணவி தற்கொலை
பெருந்துறை அருகே தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு தாய் வெளியேறியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை
பெருந்துறை அருகே தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு தாய் வெளியேறியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவி
பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் டேங்க் வீதியை சேர்ந்தவர் சேதுராமன். இவர் முறுக்கு மிக்சர் வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய மனைவி திலகவதி (வயது 38). இவர்களுடைய மகள் ஸ்ரீமதி (18), சிந்துஜா (13). இதில் ஸ்ரீமதி சித்தோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சிந்துஜா அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சேதுராமனுக்கும், திலகவதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் கடந்த 4-ந் தேதி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் திலகவதி வீட்டை விட்டு வெளியேறினார்.
தற்கொலை
இதனை ஸ்ரீமதியால் தாங்கி கொள்ள முடியவில்லை. மனம் உடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் ஸ்ரீமதி நேற்று காலை வீட்டில் விஷத்தை குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். இதை பார்த்த சேதுராமன், அவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ஸ்ரீமதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story