ஓமலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், ஏட்டுவுக்கு கொரோனா
ஓமலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், ஏட்டுவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமலூர்:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 55). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் இருந்து ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டராக பணி மாறுதலில் வந்தார். இந்த நிலையில் தேர்தல் முடிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு சென்றவர் அங்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அவரது கார் டிரைவராக பணியாற்றிய காடையாம்பட்டியை சேர்ந்த போலீஸ் ஏட்டு குமார் (40) என்பவருக்கும் கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்.
Related Tags :
Next Story