3 லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் சென்னை துறைமுகத்துக்கு 2-வது மிகப்பெரிய கப்பல் வருகை
சென்னை துறைமுக கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை துறைமுகத்துக்கு 333 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம் கொண்ட மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் நேற்று வந்தடைந்தது. இந்த கப்பல் மூலம், சென்னை பெட்ரோலியம் கழகத்துக்கு 3 லட்சம் டன் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த கப்பல், சென்னை துறைமுகத்துக்கு வருகை தந்த 2-வது மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் ஆகும். ஏற்கனவே, கடந்த 2018-ம் ஆண்டு இதேபோன்று மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் சென்னை துறைமுகம் வந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story