முன்விரோதத்தில் கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து


முன்விரோதத்தில் கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 10 April 2021 4:46 PM IST (Updated: 10 April 2021 4:46 PM IST)
t-max-icont-min-icon

பெரணமல்லூர் அருகே முன்விரோதத்தில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் அருகே முன்விரோதத்தில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 43). கூலித்தொழிலாளியான அவர் கட்டமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு நண்பரை பார்க்க ஆட்டோவில் சென்றார். அப்போது அந்த வழியாக எதிரே கட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (35), பெரணமல்லூரை சேர்ந்த முருகன் (31) ஆகியோர் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

 முன்விரோதம் காரணமாக இருவரும், ஆட்டோவை வழிமறித்து சங்கரை ஆபாசமாகப் பேசி திட்டினர். ஆத்திரம் அடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்கரை குத்தியதாகக் கூறப்படுகிறது. அதில் படுகாயம் அடைந்த அவர் பெரணமல்லூர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

இதுகுறித்து சங்கர் பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜேஸ்வரி, முருகன் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story