திருவண்ணாமலை; பஸ்களில் சென்றவர்களுக்கு முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு


திருவண்ணாமலை; பஸ்களில் சென்றவர்களுக்கு முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 10 April 2021 6:04 PM IST (Updated: 10 April 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் பஸ்களில் சென்றவர்களுக்கு முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும் என்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பஸ் மற்றும் இருச்சக்கர வாகனங்களில் சென்றவர்ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

உதவி இயக்குனர் (பஞ்சாயத்துகள்) சுரேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தனியார், அரசு பஸ்களில் வந்த பொதுமக்களிடம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினர். 

அப்போது திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பத், அண்ணாதுரை, வேங்கிக்கால் ஊராட்சி செயலர் நாராயணன், தலைவர் சாந்தி தமிழ்செல்வன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story