ராணுவ வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி


ராணுவ வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 10 April 2021 6:20 PM IST (Updated: 10 April 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

ராணுவ வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி மாநகர் மாவட்டம் தெற்கு மண்டல இந்து முன்னணி சார்பில் முத்தையாபுரம் தோப்பு பஜாரில் சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

தெற்கு மண்டல தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட பேச்சாளர் ஆறுமுகம், தெற்கு மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ், மண்டல செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக இந்து இளைஞர் முன்னணி கோட்ட செயலாளர் ராகவேந்திரன், மாவட்ட செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் கணேஷ் நகர் பொறுப்பாளர் ராஜேஷ், பாலமுருகன், இந்து முன்னணி நிர்வாகி லிங்க மாரிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story