மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கலவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலவை
கலவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமிரி வட்டார செயலாளர் ரகுபதி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நல்லூர் சம்பத், ஆற்காடு தொகுதி பொறுப்பாளர் நாகலேரிசிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேம்பி கோபி, பாபு ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் அருகே சித்தம்பாடி கவுதம்நகர் பகுதியில் கடந்த 7-ந் தேதி இரவு தேர்தல் தகராறில் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்ட 2 பேர் குடும்பத்தினருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story